அத்தியாயம் – 16
கடைசிச் சுவட்டின் முதல் அதிர்வு!
முகில்வர்மனின் பார்வை, அவன் கைகளுக்குள் இருந்த அந்த ஓலைச்சுவடிக் கட்டின் மீது நிலைத்திருந்தது.
ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்தப் பழைய ஓலைகளில், காலத்தின் சுவடுகள் தெளிவாகத் தெரிந்தன. சில ஓலைகள் அடர் பழுப்பு நிறத்தில் இருந்தன. சிலவற்றின் நிறம் காலத்தால் சற்றே மங்கியிருந்தது. ஓரங்களில் சிறிது சிறிதாகச் சிதைவு ஏற்பட்டிருந்தாலும், அவை முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டிருந்தன.
அந்த ஓலைகளைப் பார்த்தாலே, அவை பல ஆண்டுகளாக பல கைகள் பாதுகாத்து வந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது.
அது வெறும் பழைய பொருளைச் சேமித்து வைத்திருப்பது போன்ற தோற்றமல்ல.
அடிக்கடி எடுத்துப் பார்த்ததற்கான அடையாளங்கள் அவற்றில் இருந்தன.
சில இடங்களில் விரல்கள் பட்டுப் பட்டுச் சற்று மிருதுவாகி இருந்தன. ஓலைகளின் நடுப்பகுதிகளில் இருந்த தேய்மானம், அவை ஒருமுறை மட்டும் பார்க்கப்பட்டவை அல்ல என்பதைச் சொல்லியது.
முகில்வர்மன் மெதுவாக ஒரு ஓலையைத் திருப்பிப் பார்த்தான்.
அதில் வரிசை வரிசையாகக் கிறுக்கலான எழுத்துகள் இருந்தன.
அவன் கண்கள் அந்த எழுத்துகளின் மீது சில நொடிகள் ஓடியது.
ஆனால்...
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அந்த எழுத்துகள் தமிழ்தான் என்பதை அவன் உணர்ந்தாலும், அது இன்றைய தமிழ் அல்ல என்பது தெளிவாகத் தெரிந்தது. சில எழுத்துகளின் வடிவமே அவனுக்குப் புதிதாக இருந்தது.
வார்த்தையைப் போலத் தோன்றியது.
அடுத்த வார்த்தை எங்கே முடிகிறது, அடுத்தது எங்கே தொடங்குகிறது என்பதைக் கூட அவனால் சரியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
முகில்வர்மன் புருவங்களைச் சுருக்கினான்.
மீண்டும் ஒருமுறை பார்த்தான்.
பயனில்லை.
“என்ன எழுதியிருக்குன்னே தெரியலையே...”
அவன் தனக்குத் தானே மெல்ல முணுமுணுத்துக் கொண்டாவனை.
எதிரில் நின்றிருந்த மாறன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“பழங்காலத் தமிழா சார்? உங்களுக்குப் படிக்கத் தெரியுமா?” எனக் கேட்டவனிடம், முகில்வர்மன் தலையை மட்டும் அசைத்தான்.
“பழங்காலத் தமிழ் தான் மாறன். ஆனா, எனக்கு தான் படிக்கத் தெரியல.”
அவன் மீண்டும் ஓலையைத் திருப்பினான்.
அப்போது...
அவனுடைய பார்வை கையில் இருந்த ஓலைவிட்டு அடுத்த கட்டு ஓலைக்கு சென்றது.
அங்கே இருந்தது கொஞ்சம் வித்தியாசமாகவும், கொஞ்சம் கனமாகவும் இருந்தது. கிறுக்கலான எழுத்துகள் இல்லாமல், கோடுகளைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் மட்டுமே அதில் இருந்தன.
முகில்வர்மனின் விரல்கள் அங்கேயே நின்றுவிட்டன.
அவன் சில நொடிகள் அந்தக் கோடுகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.
சில கோடுகள் முழுமையடையவில்லையோ என்று அவனுக்குத் தோன்றியது.
அவன் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் விழ, முகில்வர்மனுக்குள் ஏதோ ஒன்று அசைந்தது.
அவனுக்கு தன் உணர்வுகளைத் தானே புரிந்துகொள்ள முடியாமல், மீண்டும் அந்த ஓலையை வருடினான்.
“சார்?”
அவ்வளவு நேரமும் முகில்வர்மனையும், அவன் கையில் இருந்த ஓலையையும் பார்த்துக் கொண்டிருந்த மாறனின் குரல்,
முகில்வர்மனை சற்றே நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது.
“சொல்லுங்க மாறன்.”
என்றவன், பார்வையையும், அவன் வலது கை விரலும் அந்த ஓலையின் கோடுகளை வருடுவதை நிறுத்தவில்லை.
அதுவும் அப்பொழுதுதான் பிறந்த குழந்தையைக் கையில் வைத்து மிக மிக மென்மையாகக் கையாள்வதைப் போல இருக்க, மாறனின் கண்கள் ஒரு கணம் பெரிதாயின.
முகில்வர்மனின் உடல் சிலிர்த்து அடங்குவதை கண்கூடாகக் கண்டவன், இந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று புரியவில்லையே என்று மாறனின் எண்ணங்கள் ஓடும்போதே...
முகில்வர்மனுக்கும் அதே எண்ண ஓட்டம்தான்.
என்னதான் நடக்கிறது எனக்குள்ளே?
மீண்டும் மீண்டும் அந்தக் கோட்டோவியங்களைத் தொட்டபோது மட்டும் இப்படி ஒரு உணர்வு?
அவனுடைய விரல்கள் மீண்டும் அந்தக் கோடுகளை வருடின.
இந்த முறை நிதானமாக.
அந்தக் கோடுகளைத் தொட்டுக் கொண்டிருந்தபோது, அவனுக்குள் ஒரு விசித்திரமான பரிச்சயம் மட்டும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
எங்கேயோ... இதைத் தொட்டிருக்கிறேன்.
அந்த எண்ணம் திடீரென்று அவன் மனதில் தோன்றியது.
முகில்வர்மன் திடுக்கிட்டான்.
“இல்ல... இது எப்படி சாத்தியம்?”
அவன் மெதுவாகத் தலையை அசைத்துக் கொண்டான்.
அந்த ஓலை அவனுக்குப் புதிது.
அந்தக் கோடுகளும் அவனுக்குப் புதிது.
அதை வரைந்தவர் யார் என்பதும் தெரியாது.
அப்படியிருக்க...
ஏன் இந்த உணர்வு?
அவன் அடுத்தடுத்த ஓலைகளைத் திருப்பினான்.
அதிலும் எழுத்துகள்.
அதே பழைய வடிவம்.
அர்த்தம் புரியாத வரிகள்.
ஆனால் எழுத்துகளுக்கு நடுவே...
மீண்டும் கோட்டோவியங்கள்.
இலை வடிவங்கள்... பச்சிலைச் செடிகளின் தண்டு வடிவங்கள்...
அருகில் சில கிறுக்கல்கள்.
சில குறியீடுகள்.
கீழே மண்ணை ஒத்த சில கோடுகள்.
அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய பாதை போல வளைந்து சென்ற கோடு.
முகில்வர்மனின் பார்வை அந்தப் பாதையில் நின்றது.
அவன் விரல் அறியாமலேயே அந்தக் கோட்டைப் பின்தொடர்ந்தது.
ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை.
அந்தக் கோடு எங்கே செல்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால்...
அவனுடைய விரல் அந்தப் பாதையைத் தொடர்ந்து சென்ற விதம் மட்டும் விசித்திரமாக இருந்தது.
அது ஒரு புதிய விஷயத்தை ஆராயும் மனிதனின் தொடுதல் இல்லை.
ஏற்கனவே தெரிந்த ஒன்றை மீண்டும் தேடும் மனிதனின் தொடுதல் போல இருந்தது.
அவனுக்கே அந்த உணர்வு பயமாக இருந்தது.
விரல் பாதையின் கடைசி வளைவை அடைந்ததும், அவன் திடீரென கையை நிறுத்தினான்.
மார்புக்குள் மூச்சு சற்று வேகமாக ஏறி இறங்கியது.
மாறனும் அதை கவனித்துவிட்டான்.
“சார்...”
முகில்வர்மன் பதில் சொல்லவில்லை.
“சார்... என்னாச்சு?”
அவன் மெதுவாகத் தலையை உயர்த்தினான்.
“ஒண்ணுமில்ல.”
“இல்ல சார்... முகமே ஒரு மாதிரி மாறிடுச்சு.”
முகில்வர்மன் சற்றே சிரிக்க முயன்றான்.
“அப்படியா?”
“உடம்பு எதுவும் சரியில்லையா?”
“தெரியல.”
அவன் நெற்றியை விரல்களால் மெதுவாகத் தேய்த்துக் கொண்டான்.
“என்ன பண்ணுங்க சார்?”
“லேசா தலைவலிக்கிறது போல இருக்கு.”
என்று சொல்லிவிட்டு, அவன் மீண்டும் அந்த ஓலையைப் பார்த்தான்.
“இந்தக் கோடுகள்... ஏதோ ஒரு மாதிரி இருக்கு.”
மாறன் புரியாமல் பார்த்தான்.
“என்ன மாதிரி?”
முகில்வர்மன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை.
அவன் அந்தக் கோடுகளை மீண்டும் பார்த்தான்.
“தெரியல.”
சில நொடிகள் கழித்து மெதுவாகச் சொன்னான்.
“இதை நான் பார்த்ததே இல்ல. ஆனா... பார்த்த மாதிரி இருக்கு.”
மாறனின் முகத்தில் குழப்பமும் ஆச்சரியமும் ஒருங்கே தோன்றியது.
“என்ன? இந்தக் கோடுகளைப் பார்த்த மாதிரி இருக்கா?” எனவும்,
“அதான் எனக்கே புரியல மாறன்.” என்றவாறே,
முகில்வர்மன் ஓலையை மெதுவாகக் கீழே வைத்தான்.
“இந்தக் கோடுகளைப் பார்த்ததும் உங்க கம்ப்யூட்டர் கோடுகள் ஞாபகம் வந்திருக்கலாம் சார்.”
என்றான் கேலி போலவே மாறன்.
முகில்வர்மன் இருந்த மனநிலையில் அந்தக் கேலியை அவன் கவனிக்கவில்லை என்பதை மாறன் கவனித்தான்.
முகில்வர்மன் இன்னும் சில நொடிகள் அந்த ஓலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் அவனுடைய பார்வை அந்தக் கோடுகளின் மீது விழுந்தது.
அவற்றில் எதுவுமே அவனுக்குப் புரியவில்லை.
அவன் அதை புரிந்துகொள்ளவும் முயற்சிக்கவில்லை.
அவன் அந்த ஓலையைத் மறுபடியும் வருட முயன்றான்.
ஆனால் நடுவிலேயே கையை நிறுத்திக் கொண்டான்.
“வேண்டாம்.”
மாறன் அவனைப் பார்த்தான்.
“சார்?”
“போதும்.”
அவன் ஓலைக்கட்டைப் பத்திரமாகச் சேர்த்தான்.
“மொபைல்ல போட்டோ கிளிக் பண்ணிக்கிறேன்.”
மாறன் உடனே தலையசைத்தான்.
“சரி சார்.”
“இது சுனையாழி அவங்க தாத்தாவோட குறிப்புகள் தானே?”
“ஆமா சார்.”
“அப்படின்னா, அவங்ககிட்ட திரும்பக் கொடுக்கணும். அதுவரைக்கும் கவனமா வச்சுக்கோங்க.”
“கண்டிப்பா சார்.”
முகில்வர்மன் அந்த ஓலைக்கட்டின் மீது கடைசியாக ஒரு பார்வை செலுத்தினான்.
அந்தக் கோட்டோவியங்கள் மீண்டும் அவன் கண்களுக்குள் விழுந்தன.
அந்தக் கோடுகள்...
அந்தப் பரிச்சய உணர்வு...
ஏதோ சொல்ல முயற்சி செய்வது போல இருந்தது.
ஆனால் என்ன சொல்ல வருகிறது?
அவனுக்குத் தெரியவில்லை.
அவன் பார்வையை விலக்கிக் கொண்டான்.
அடுத்த நொடியே அவனுடைய கைபேசி ஒலித்தது.
அந்த அமைதியை உடைத்த அந்தச் சத்தத்தில் அவன் சற்றே திடுக்கிட்டான்.
கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.
“அம்மா.”
அவன் அழைப்பை ஏற்றான்.
“சொல்லுங்கம்மா.”
மறுமுனையில் சில நொடிகள் அமுதவல்லியின் குரல் கேட்டது.
முகில்வர்மனின் முகத்தில் இருந்த இறுக்கம் சற்றே தளர்ந்தது.
“இன்னும் இங்கிருந்து கிளம்பலைம்மா.”
என்றவன், மறுமுனையின் குரலுக்கு அவன் கடிகாரத்தைப் பார்த்தான்.
“இப்பவே கிளம்புறேன்.”
மறுமுனையில் மீண்டும் ஏதோ கேள்வி.
“சரி... அப்பாவும் இருக்காரா?”
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அவன் சொன்னான்,
“சரி. நான் வந்துட்டுப் பேசுறேன்.”
அழைப்பை முடித்தவன், கைபேசியைச் சட்டைப் பைக்குள் வைத்தபடியே மாறனைப் பார்த்தான்.
“நான் கிளம்புறேன்.”
“சரிங்க சார்.”
முகில்வர்மன் ஒரு கணம் அந்த ஓலைச்சுவடிக் கட்டைப் பார்த்தான்.
பிறகு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தான்.
அவனோட பென்ஸ் சென்னையை நோக்கிப் பறந்தது.
அதே நேரத்தில்...
மாறன் தனியாக நின்றபடி அந்த ஓலைச்சுவடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சில நொடிகளுக்கு முன்பு முகில்வர்மனின் விரல் சென்ற இடத்தில் அவன் பார்வை நின்றது.
அந்தப் பழைய ஓலையின் மீது...
முகில்வர்மன் அதை கையாண்ட விதத்தை நினைத்தபடி, அதை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதைத் தொட்டவன் யார் என்பதை அறியாமல்...
பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கோடுகள் தன்னுடைய முதல் சுவட்டை மீண்டும் உணர்ந்தது போல அமைதியாகக் கிடந்தன.
மாறனுக்கு நிச்சயம் புரிந்திருந்தது...
இந்த ஓலைச்சுவடிக்கும் முகில்வர்மனுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பதைத் தாண்டி...
முகில்வர்மன் பார்க்காமல் விட்ட அந்தச் சுவடியை மாறன் ஒருவேளை பார்த்திருந்தால்...
முகில்வர்மனுக்கு மட்டுமல்ல... தனக்குமே இந்த ஓலைச்சுவடியுடன் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பதும் அவனுக்குப் புரிந்திருக்கும்.
கடைசிச் சுவடு, முதல் முறையாக அதிர்ந்த
அதே நேரத்தில்...
மும்பையின் உயரமான கட்டிடத்தின் அமைதியான அறையில், கணினித் திரையின் வெளிச்சம் மட்டும் வசீகரன்ராஜின் முகத்தில் விழுந்துகொண்டிருந்தது.
அவனுடைய பார்வை திரையில் இருந்தாலும், மனம் முழுவதும் ஒரே பெயரைச் சுற்றிக்கொண்டிருந்தது.
முகில்வர்மன்!
பிரதாப் ராஜ் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் ஒலித்தன.
“அவனைப் பற்றி மட்டும் விசாரிக்காதே... அவனுக்கு முன்னாடி இருந்தவர்களைப் பற்றி விசாரி.”
வசீகரன் மெதுவாக நாற்காலியில் சாய்ந்தான்.
இந்த முகில்வர்மன் யார்?
தொடரும்...