அத்தியாயம் – 11
பிரிவும்! அறிமுகமும்!
காடு மெல்ல மெல்லப் பின்னகர்ந்து கொண்டிருந்தது.
சற்று நேரத்திற்கு முன்பு பெய்த சாரல் மழையின் ஈரப்பதம் காற்றில் அப்பட்டமாகத் தெரிந்தது. மரங்களின் அடர்ந்த இலைகளுக்கு இடையே ஊடுருவிய நிலவொளி, காட்டின் நிலப்பரப்பில் சிறு சிறு வெள்ளித் தகடுகளாக விரிந்துகிடந்தது. பௌர்ணமி நிலவொளி, அந்தத் தார்ச் சாலையில் கண்களுக்கு எட்டிய தூரம்வரை வெள்ளிக் கம்பளத்தை விரித்ததுபோல பளபளத்தது.
ஜன்னல் கண்ணாடியைத் தாண்டிக் கேட்ட ராக்கோழிகளின் கூச்சலும், சருகுகளின் சலசலப்பும் மெல்ல மெல்ல மறைந்து, காரின் எஞ்சின் சத்தம் மட்டும் கேட்கத் தொடங்கியது.
இயற்கையின் பேரழகின் அடர்த்தியை விட்டு விலகி, கார் நாகரிக உலகத்தை நோக்கி மெல்ல அடியெடுத்து வைப்பது போன்ற ஓர் உணர்வு மூவருக்குள்ளும் ஏற்பட்டது.
காட்டுப் பாதையின் கிளைச் சாலையிலிருந்து விலகி, கார் மெயின் பைபாஸ் சாலையைத் தொட்டதும் மாறன் வேகத்தைக் குறைத்து, பின்னோக்கிக் கண்ணாடியைப் பார்த்தான்.
"சார்..."என்றான் முகில்வர்மனைப் பார்த்து.
சொல்லுங்க மாறன்.
இப்போ எங்க போகணும்? என்றான்.
'இந்தப் பெண்ணை எப்படி மறந்துபோனேன்?' என்று எண்ணமிட்டபடியே சுனையாழியைப் பார்த்தவன்,
சுனையாழி, உங்களை எங்க ட்ராப் பண்ணணும்?என்றான்.
முன் இருக்கையில் இருந்த சுனையாழி உடனே திரும்பி,
முகில் சார்... என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டுடுங்க. என்றாள்.
"என்னது... பஸ் ஸ்டாப்பிலையா? டாக்டர் மேடம், டைம் பார்த்தீங்களா? கிட்டதட்ட எட்டு தொடபோகுது. இதுக்குமேல நீங்க பஸ் பிடிச்சு திருச்செந்தூர் எப்போ போய்ச் சேர்றது? ஆங்!; என்று மாறன் கேட்கவும், முகிலும் அவளை கேள்வியாகப் பார்த்தான்.
நான் திருச்செந்தூர் போகணும் சார். என்னை விட்டுட்டு நீங்க ரிட்டன் வர லேட் நைட் ஆகிடும்... என்றவளைப் பார்த்து, கடுகடுப்பாகப் பேசினான் முகில்.
சுனையாழி, நாங்க என்ன பொம்பளைப் பிள்ளைகளா? எங்களுக்காக நீங்க கவலைப்பட... உங்களை சேஃப்பா கொண்டுபோய் விடணும்தானே நாங்க ரெண்டு பேரும் கேட்டுட்டு இருக்கோம். அது ஏன் உங்களுக்கு புரியல?
கார் ஓட்டிக்கொண்டிருந்த மாறன், முகிலின் கடுகடு பேச்சில் வந்த சிரிப்பை அடக்கியபடி,
இல்ல டாக்டர் மேடம்... ஒரு பொண்ணை இந்த ராத்திரி நேரத்துல தனியா விடக் கூடாது. இங்கிருந்து பார்த்தா திருநெல்வேலியை விட திருச்செந்தூர்தான் கொஞ்சம் பக்கம். அதனால சார் சொல்லறபடி, முதல்ல உங்களை உங்க வீட்ல ட்ராப் பண்ணிடுறேன். அதுக்கப்புறம் சாரை அவர் தங்கி இருக்கற ஹோட்டல்ல ட்ராப் பண்ணிடுவேன்.என்றான் சிறு புன்னகையோடு.
அவள் என்னமோ முகிலுக்காகக் கவலைப்படுவது போல பேசிவைத்தான்.
சுனையாழியும் அவன் பேசிய விதத்தைக் கவனிக்காமல் தலையாட்ட, முகிலும் வந்த சிரிப்பை அடக்கியபடி,
நீங்க போங்க மாறன்.
"ஓகே சார்".என்று தலையாட்டியபடி காரைத் திருச்செந்தூர் பாதையில் திருப்பினான்.
காருக்குள் மெல்லிய அமைதி நிலவியது.
அடர்ந்த காட்டுக்குள் இவ்வளவு தூரம் அலைந்தும், தாத்தா சுவடியில் சொன்ன அந்த மூலிகை கைக்குச் சிக்கவில்லையே என்ற யோசனை சுனையாழியிடம் இருந்தது.
முகில் அந்த அமைதியைக் கலைத்தான்.
என்ன சுனையாழி... பசிக்குதாங்க? என்றான்.
சுனையாழி லேசாகத் திரும்பி,
ம்ம்ம்... காலையில இருந்து காட்டுக்குள்ள சுத்துனதுல பசி தெரியல. இப்ப டீ குடிச்சா நல்லா இருக்குமேன்னு தோணுது.என்றாள்.
மாறனும் எனக்கும் டீ வேணும் சார். உங்களுக்கு?என்றான் மாறன்.
நானும் ஜாயின் பண்ணிக்கிறேன். உங்க ஊர் உங்களுக்குத்தான் தெரியும். டீ குடிக்கற மாதிரி இருக்கிற இடமா பார்த்து நிறுத்துங்க. என்றான்.
அந்த நேரத்திலிருந்தே மூவருக்குள்ளும் நட்பு என்ற விதை துளிர்விடத் தொடங்கியது.
பேச்சு பேச்சாக இருக்க, உணவு விடுதியுடன் இருந்த ஒரு டீக்கடையில் காரை நிறுத்தி, இரவு உணவையும் முடித்து, டீயையும் பருகிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இப்போது காரில் நிலவிய அமைதியை மாறன் கலைத்தான்.
டாக்டர்... நீங்க இருக்கறது அலோபதில... ஆனா தேடிட்டு இருக்கறது சித்த மருத்துவத்தை... ஏன்? இப்படி? என்றான்.
எனக்கும் இந்த டவுட் இருக்கு சுனையாழி.என்றான் முகில்.
அதன் பிறகு,
முதல்ல இந்த டவுட்டுக்கு பதில் சொல்லுங்க. உங்களுக்கு யார் சுனையாழின்னு பேர் வெச்சா? இப்பதான் முதல் முறையா இப்படி சுத்தமான தமிழ்ப் பெயரைக் கேட்கிறேன். என்றான் முகில்வர்மன்.
உங்க இரண்டு டவுட்டுக்குமே காரணம் என் தாத்தாதான்.
அண்ணாக்கு யாழ்வேந்தன்னு பெயர் வெச்சதும், எனக்கு சுனையாழின்னு பெயர் வெச்சதும் அவர்தான்.
தாத்தா சித்த மருத்துவர். பேர் அகத்தியன்.
அப்பாவும் டாக்டர்தான். ஆனா அவர் அலோபதி.
அண்ணாவும் டாக்டர்தான்...
நானும்... என்று அவள் ஆரம்பிக்கும்போதே, மாறனும் முகிலும் ஒரே குரலில்,
டாக்டர்தான்!என்றார்கள் கோரஸாக.
மாறன் முகில்வர்மனைப் பார்த்து,
குடும்பமே டாக்டர்ங்கதான் போல சார்!என்றான் புன்னகையோடு.
சுனையாழியும் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தபடி,
அம்மா டாக்டர் இல்ல.என்றாள்.
ம்ம்ம்...
ஓலைச்சுவடின்னு என்னமோ சொன்னீங்களே... அது எப்படி உங்களுக்கு கிடைச்சது?என்று மாறன் கேட்க,
தாத்தா சொன்னாங்க... அது தலைமுறை தலைமுறையா எங்க குடும்பத்துக்கிட்டதான் அந்தச் சுவடி இருக்காம்.
நம்பியான் னு ஒருத்தர்தான் அதை எழுதினதா, ஒருமுறை எங்க தாத்தா சொன்ன ஞாபகம் இருக்கு... என்றவளை இடைமறித்தான் முகில்.
அது சரி மேடம்... எவ்வளவு வருஷமா இந்த இலையைத் தேடிட்டு இருக்கீங்க?
நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போதிருந்தே... கிட்டத்தட்ட ஏழு வருஷமா. என்றாள், இப்போதும் சிறு ஏமாற்றத்தோடு.
விடுங்க மேடம்... தேடினது கிடைக்கலன்னா, அது அங்க இல்லைன்னு அர்த்தமில்லை. வேற ஏதாச்சும் வழி இருக்கும். என்றான் மாறன்.
ஆமா சுனையாழி... திருச்செந்தூர் போயி, வீட்ல அமைதியா உட்கார்ந்து அந்தச் சுவடியை இன்னொரு தடவை எடுத்துப் படிச்சுப் பாருங்க. நாம ஏதாச்சும் சின்ன இடத்தை கவனிக்காம விட்டிருக்கலாம்.என்றான் முகில்வர்மனும்.
பேச்சினூடே, சுமார் நாற்பது நிமிடப் பயணத்திற்குப் பிறகு, கார் திருச்செந்தூரில் உள்ள சுனையாழியின் வீட்டு வாசலில் நின்றது.
சுனையாழி அவர்களிடம் விடைபெற்று வீட்டிற்குள் சென்றாள். அவள் உள்ளே போனதை உறுதிசெய்துவிட்டு, மாறன் காரைத் திருநெல்வேலியை நோக்கித் திருப்பினான்.
இப்போது காரில் முகிலும் மாறனும் மட்டுமே.
கார் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் விரைந்தபோது, முகில் அந்தச் சந்தேகத்தைக் கேட்டான்.
மாறன்... நாம காலையில போகும்போதும், இப்ப திரும்பி வரும்போதும் அடிவாரத்துல ஒரு பழைய கார் நின்னுட்டே இருந்துச்சே... கவனிச்சியா?
இல்லையே... நீங்க ஏதாவது அப்படிப் பார்த்தீங்களா? என்றான்.
ஆமாம் மாறன்... நான் ஒரு கருப்பு நிறப் பழைய காரைப் பார்த்தேன். போகும்போதும், வரும்போதும் அதே இடத்துல நின்னுட்டு இருந்துச்சு. திரும்பி வரும்போது, அந்தக் கார் நிறுத்தி இருந்த காட்டின் இருட்டுக்குள்ள ஏதோ ஒரு டார்ச் வெளிச்சம் மின்னி மறைஞ்சதை நான் பார்த்தேன்.
நிச்சயம் நாம மூணு பேரைத் தவிர, நாலாவதா ஒருத்தனோ... இல்ல பல பேரோ காட்டுக்குள்ள இருந்திருக்காங்க!
மாறன் அதிர்ச்சியுடன்,
என்ன சொல்றீங்க?என்றான்.
நிச்சயம் அது டார்ச் வெளிச்சம் போலதான் இருந்தது மாறன். என்றான்.
அதன் பிறகு காரில் அமைதி மட்டுமே.
அவரவர் எண்ணங்களில் மூழ்கிப்போயிருந்தார்கள்.
கார் திருநெல்வேலி நகருக்குள் நுழைந்து, முகில் தங்கியிருந்த ஹோட்டல் வாசலில் நின்றது.
முகில் மாறனுக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு, வரவேற்பறையைக் கடந்து தன் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
அடுத்த நாள் காலை...
சூரியனின் இளவெயில் திருநெல்வேலி நகரத்தின் மீது பரவியிருந்தது.
முகில் சென்னைக்குத் திரும்புவதற்காகத் தன் பயணப் பைகளை எடுத்துக்கொண்டு, ஹோட்டல் வரவேற்பறையில் சாவியைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.
ஹோட்டலின் பார்க்கிங் பகுதியில், அவனது காரை நோக்கி நடந்தவனின் நடை அப்படியே நின்றுபோனது.
தொடரும்...