• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-25

நீலவானத்தின் நீண்டு பரந்த கால்கள்
எல்லைகள் தாண்டி எழுந்து கடக்க
கடச்சீட்டுகள் கையில் கொள்வதில்லை

வெண்மேகம் குழுவாய் கூடி
ஓதிக் கொள்ளும் வேதத்தால்
ஓங்கி ஒழுகும் மழை
சாதி பார்த்து
சட்டை நனைப்பதில்லை

குறுமணலை கொட்டிக் கொண்டு
படுக்கை கட்டும் கடல்பரப்பு
ஏழ்மையான எந்த மடிக்குமட்டும்
பள்ளம் பறிப்பதில்லை

இறை வடித்த விதியெதற்கும்
இருக்கவில்லை வேற்றுமை
கரைபடிந்த மனிதமனம் தவிர!!

ஒற்றுமை அருளிய
சுதந்திரத்தைக் காற்றை
வேற்றுமை மாசுபடுத்தாது இருக்கட்டும் ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏

நாடு திரும்பி விட்டேன் இனி தினமும் பதிவு வரும். இந்தக் கதை இன்னும் ஓரிரு அத்தியாயங்களில் முடிவுறும். பிறகு 'கைக்கொள்ளும் பொற்சுடரே' என்னும் வர்ணஜால போட்டிக் கதையை ஆரம்பிக்கலாம். இணைந்திருங்கள் மிக்க நன்றி.

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.


தலையல் மொழி-25-1
தலையல் மொழி-25-2
 
Back
Top
Developed and maintained by – Akeshya